கிருஷ்ண பகவான் விரும்பும் 5 விஷயங்கள்

கிருஷ்ண ஜெயந்தி : கிருஷ்ண பகவான் விரும்பும் 5 விஷயங்கள்

கிருஷ்ண பகவான் விரும்பும் 5 விஷயங்கள்

கிருஷ்ண பகவான் விரும்பும் 5 விஷயங்கள்

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய இந்து பண்டிகைகளில் ஒன்று, கிருஷ்ணரின் பிறந்தநாள், ஜன்மாஷ்டமி என அழைக்கப்படும்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில், பல பக்தர்கள் விரதத்தைக் கடைப்பிடிப்பது வழக்கம். அதுமட்டுமில்லாமல் கிருஷ்ணர் விக்ரகத்திற்கு அபிஷேகம், அலங்காரம், பிடித்த பலகாரங்கள் நைவேத்தியமாகப் படைத்தல் என தொடங்கி, கிருஷ்ணரின் பாடல், பஜனைகளுக்கு நடனமாடுதல், கோலாட்டம் போன்ற விஷயங்கள் குழுவாக சேர்ந்து செய்வது வழக்கம்.

சில கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணர் வேடமிட்டும், கிருஷ்ணரின் புராண கதைகளை நாடகங்களாகப் போடுவது வழக்கம்.

கிருஷ்ணரின் பெருமைகள் :

பகவான் கிருஷ்ணர் இரக்கம், அன்பு மற்றும் மென்மை ஆகியவற்றின் கடவுளாக பார்க்கப்படுகிறது. குறும்புக்கார கடவுளான கிருஷ்ணர் குழந்தைகளுக்கும், ஆயிரக்கணக்கான கோபிகளின் இதய துடிப்பாக இருந்தவர்.

இன்றும் கிருஷ்ணரின் அற்புத கதைகள், சாகசங்கள், புத்திசாலித்தனம், ஆகியவை கேட்போரின் மனதைக் கொள்ளைக் கொள்ளும் விதமாக இருக்கும். என்ன தான் தன் நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடி தின்றாலும், அவரின் பேச்சால், செயலால் கோபியர்கள் மயங்கிக் கடந்தனர்.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், பகவான் கிருஷ்ண பராத்மாவுக்கு பிடித்த விஷயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

​புல்லாங்குழல்

கிருஷ்ண பரமாத்வாவின் பேச்சு, செயல்களால் மட்டுமல்லாமல், அவரின் புல்லாங்குழல் கானத்தால் கோபியர்களை மட்டுமல்லாமல், அவர்கள் வளர்த்து கால்நடைகளும் மயங்கி கிடந்தன. கோபியர்கள் கேட்கும் கானமாகக் கிருஷ்ணரின் புல்லாங்குழல் மெல்லிசை இருந்தது. அதனால் கிருஷ்ணர் எப்போதும் புல்லாங்குழலுடன் இருப்பது வழக்கம்.

​மயில் இறகு :

அனைத்து கடவுள்களும் தன் தலையில் கிரீடம் அணிந்திருப்பது வழக்கம். அதில் கிருஷ்ண பரமாத்மா தன் கிரீடத்தில் மிகவும் தூய்மையான, மழையின் சின்னம் என நம்பப்படும் மயில் இறகு எப்போதும் அணிந்திருப்பார். அவரின் அழகுக்கு அழகு சேர்ப்பதால் மயில் இறகுக்கு மேலும் பெருமை சேர்ந்தது என்றால் மிகையாகாது.

​மஞ்சள் வேஷ்டி

பால கோபாலரின் விருப்பமான விஷயங்களைப் பற்றி பேசும் போது அவர் அணிந்திருக்கக்கூடிய மஞ்சள் வேஷ்டியும் அவருக்கு விருப்பமான ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது

​வெண்ணெய் :

கிருஷ்ணர் தனது சிறு வயதில் தன் கிராமத்தில் உள்ள வீடுகளில் திருட்டுத்தனமாகச் சென்று வெண்ணெய் திருடி நண்பர்களுடன் பகிர்ந்து உண்பது வழக்கம்.

வெண்ணெய் கிருஷ்ணரின் இதயத்தின் தூய்மையைக் குறிக்கிறது.

​கால்நடைகள்

கிருஷ்ணரை நந்த கோபாலன் என்று அழைக்கப்படுகிறார். இது உண்மையில் ‘பசு பாதுகாவலன்’ என்று பொருள் படும். அதாவது கோகுலத்தில் வாழ்வாதாரத்திற்கான முக்கிய தொழில் கால்நடை வளர்த்தல், பால், வெண்ணெய் தயாரித்தல். கோபியர்கள் மற்றும் கால்நடைகளுடன் வளர்ந்த கோபாலன் அதை மிகவும் நேசித்ததாக நம்பப்படுகிறது.